Tuesday 17 April 2012


அச்சிடுக
மின்-அஞ்சல்


30 மார்ச் 2012 மாலை 11:22
மிக சுலபமாக, ஆக்சிஜென் இல்லாத இரத்தம் வலது இதயத்தில் பெறப்பட்டு, பின் நுரையீரல் சென்று அங்கு ஆக்சிஜென் ஊட்டப்பட்டு, பின் ஆக்சிஜென் நிரம்பிய இரத்தம் இடது இதயத்திற்கு வந்து உடல் முழுவதும் செல்கிறது என்று சென்ற தொடரில் படித்தோம்.
இப்படியாக  உடல் முழுவதிற்கும் தேவையான ஆக்சிஜென் ஏற்றப்பட்ட இரத்தத்தை , மிக நேர்த்தியாக கையாண்டு வழங்கி ,உடலில் உள்ள எல்லா செல்களும் இறந்து விடாமல் காக்கும் இதயம், தான் செயல்படவும் அந்த ஆக்சிஜென் ஏற்றப்பட்ட இரத்தம் தங்கு தடையின்றி அவசியம் ஆகிறது.
தன்னுடைய அறைகள் முழுவதும் இரத்தத்தை எப்போதும் கொண்டுள்ள, அதுவும் இடது அறையில் ஆக்சிஜென் ஏற்றப்பட்ட இரத்தம் கொண்டுள்ள இதயம், தனது தேவைக்கு, அந்த அறைகளில் இருந்து துளி இரத்தம் கூட பெறமுடியாது.
400px-Coronary_arteries.svg
எப்படி இதயத்தின் தசைகள் சுருங்கி விரிய தேவையான ஆக்சிஜென் நிரம்பிய இரத்தம் கிடைக்கிறது..?
இதயத்தின் இடது பக்க கீழ் அறை (LEFT VENTRICLE ) சுருங்கி,அழுத்தத்தின் மூலம், வால்வை தாண்டி AORTA என்ற இரத்த குழாய் மூலம் ஆக்சிஜென் ஏற்றப்பட்ட இரத்தத்தை உடல் பூராவும் செலுத்தும் போது, அந்த AORTA என்ற இரத்த குழாயில் இருந்து CORONARY ARTERY என்ற பெயர் தாங்கிய இரத்த குழாய்கள் இரண்டு , தனியாக பிரிந்து, பின்னர் இதயத்தின் மேல் புறம் பலவாறு பிரிந்து, இதய தசைகளுக்கும்,
இதயத்தின் மற்ற பாகங்களுக்கும் தேவையான ஆக்சிஜென் ஊட்டப்பட்ட இரத்தத்தை , இதயம் சரியாக செயல்பட வழங்குகிறது..இந்த CORONARY ARTERY என்ற இதய இரத்த வழங்கும் இரத்த குழாய்களில்,, ஏதேனும் காரணமாக அடைப்போ அல்லது இரத்த குழாய் சுவர் சுருக்கமோ அல்லது வெளியில் இருந்து ஒன்று அமுக்கி இரத்த ஓட்டத்தை தடுப்பதோ அல்லது சில நேரங்களில் இரத்த  குழாயில் கசிவு ஏற்பட்டு இதயம் செல்லும் இரத்தம் அளவு குறைவோ அல்லது வேறு ஏதோ காரணங்களால், இரத்த ஓட்டம் சரியாக இதயத்தின் தசைகளை அடையா விட்டால், ஏற்படும் நிலை தான் ஹார்ட் அட்டாக் என்று நாம் சொல்லுவது.
இதயத்திற்கு ஆக்சிஜென் ஊட்டப்பட்ட இரத்தம் சென்றவுடன், அதன் வேலை முடிந்து, கழிவான CO 2 என்ற கார்பன் டை ஆக்சைட் உள்ள, ஆகிஜென் இல்லாத இரத்தத்தை CARDIAC VEIN என்ற இரத்த குழாய் மூலம், ஆக்சிஜென் ஏற்றப்பட மீண்டும் இதயத்தின் வலது மேல் அறையை ( RIGHT ATRIUM ) அடைந்து, தனது பயணத்தை தொடர்கிறது சங்கிலி தொடர்போல...
இதயத்தின் விசேஷ தசையின் பிரத்தியேக தன்மையான , சுருங்கி விரியும் pumping action காரணமாக, இதயம் ஆக்சிஜென் இல்லாத இரத்தத்தை தன்னுள் வாங்கி, நுரையீரலின் உதவியுடன் ஆக்சிஜென் ஏற்றப்பட்டு, உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் அனுப்பி, உடலை சீராக வைக்கிறது என்றும், அப்படி சுருங்கி விரிய இதய தசைக்கும் ஆக்சிஜென் ஏற்றப்பட்ட இரத்தம் வேண்டும், ஆனால் அந்த இரத்தத்தை இடது அறையில் உள்ள இரத்தில் இருந்து ஒரு துளி கூட பெற முடியாது என்றும், உடலின் பொது இரத்த விநியோகம் முறை மூலம் மட்டும் தான் தன் ரேஷன் இரத்த பங்கை பெற முடியும் என்று பார்த்தோம். இதயத்திற்கு சாதாரண சூழலில் ஒரு அளவு இரத்தமும், அதன் வேலை சில நிலைமைகளில் அதிகரிக்கும் போது அதற்க்கு ஏற்ப கொஞ்சம் கூட இரத்தமும் தேவை. இதை நினைவில் கொண்டு இனி ஹார்ட் அட்டாக் என்றால் என்ன என்று பார்ப்போம்..
heart_attack
ஹார்ட் அட்டாக்..
இலகுவாக புரிந்து கொள்ள.....இதயத்தின் தசைக்கு போதுமான ஆக்சிஜன் ஏற்றப்பட்ட இரத்த போக்கு குறையும் போது, அதன் செயல்பாடு பாதிக்க ஆரம்பிக்கிறது. இதற்க்கு ANGINA என்று பெயர்.முற்றிலும் ஆக்சிஜன் (ஏற்றப்பட்ட இரத்தம் ) சப்ளை நிற்கும் போது , இதய தசை இறக்க தொடங்குகிறது  இதற்க்கு ஹார்ட் அட்டாக் என்று பெயர்.
சற்று விவரமாக .....ஏதோ ஒரு காரணத்தால் (காரணங்களை பின்னர் பார்ப்போம் ),இதயத்திற்கு இரத்தம் வழங்கும் coronary artery இன் உள்பக்க சுவற்றில் plaque எனப்படும் ஒரு கரை உண்டாகி, அது சிறுசிறுதாக வீங்கி அது அந்த இரத்த குழாயின் விட்டதை குறைத்து ,இரத்த ஓட்டத்தை குறைக்க செய்கிறது. இந்த plaque என்னும் கரை , இரத்த தட்டை அணுக்களை (PLATELET ) சுற்றி கொலஸ்ட்டரால் படிவதால் ஆனது. நாளடைவில் அதன் மேல் கால்சியம் படிந்து அது கல்லாகி விடுகிறது.
இப்படி மேலும் மேலும் கொலஸ்ட்டரால் படிவதால் , நாளடைவில் இரத்த குழாயின் உட்சுவர் அதிகம் குறுகலாகி விடுகிறது. இந்த நேரத்தில், தேவையான இரத்தம் இதயத்திற்கு செல்லாமல், இதய தசைகள், ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகி , வலி உண்டாகிறது.( உதாரணம்.. மிக கனமான பொருளை தூக்கும் போது கை தசைகள் வலிப்பது போல் ). இப்போது இதய தசைகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் குறைகிறது அன்றி முழுவதும் தடை பட வில்லை இந்த இதய வலிக்கு ANGINA என்று பெயர்.
இந்த நிலையில், சாதாரண ஓய்வு நிலைகளில், ஹார்ட் தசைகளுக்கு தேவையான இரத்தம் ஓரளவுக்கு கிடைத்து விடும். ஆனால், இதயத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கும் போது ( உதாரணம் உடல்பயிற்சி, அதிக காய்ச்சல், கர்ப்ப காலம், ஏதாவது டென்சன் போன்றவை ), அதனுடன் இதய தசைக்கு அதிகமாக தேவைப்படும் ஆக்சிஜென் (ஏற்றப்பட்ட இரத்தம்) கிடைக்காமல் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுவதற்கு ANGINA என்று பெயர். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இருதய வலி என்னும் ANGINA , அநேக நேரங்களில் நெஞ்சு வலியாக , வெளிபட்டாலும் , சில நேரங்களில் நெஞ்சு வலியாக தன்னை வெளிபடுத்தாமல், வேறு விதமாகவும் வெளிபடுத்தும்.
இந்த PLAQUE என்னும் கரை உடைந்தால், அதில் இருந்து சிறு இரத்த கட்டு இரத்த குழாயின் உட்புறம் ஏற்பட்டு, சீராக செல்லும் இரத்த ஓட்டத்திற்கு இடையில் ஒரு அணை போல இந்த இரத்தக்கட்டு குறுக்கிட்டு அதற்க்கு பின் இரத்தம் செல்வதை முழுவதுமாக தடுத்து விடும். இதயத்தின் எந்த பகுதிக்கு இப்படி இரத்தம் முழுவதுமாக செல்லவில்லையோ, அந்த பகுதியில் உள்ள தசை இறந்து விடும். இதற்க்கு ஹார்ட் அட்டாக் என்று பெயர். அதாவது மருத்துவ சொல்படி MYOCARDIAL INFARCTION (myo = தசை, cardial = இதய ,infarction -ஆக்சிஜென் இன்மை காரணமாக இதய தசை இறந்து போதல்).இந்த நிலையில் சாதரணமான ஓய்வு நிலையில் கூட, இதய தசைக்கு அதற்கு தேவையான ஆக்சிஜென் (ஏற்றப்பட்ட இரத்தம்) கிடைப்பது இல்லை.
தொடரும்..
இன்ஷா அல்லாஹ்..
தொகுப்பு : டாக்டர். டி முஹம்மது கிஸார்,
குழந்தை நல மருத்துவர்,
சென்னை.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home