Tuesday 17 November 2015

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்
பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம். ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம். இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம்
உய‌ர்‌ந்த புரத ச‌த்து ‌நிறை‌ந்த உண‌வி‌ல் சோயா ‌பீ‌ன்‌சி‌‌ற்கு அடு‌த்தபடியாக வே‌ர்‌க்கடலை இட‌ம்பெறு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், பா‌ஸ்பர‌ஸ், கால‌்‌சி‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

வ‌யி‌‌ற்‌றி‌ல் பிரச்சினை உள்ளவர்கள், உட‌ல் எடையை‌க் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலா‌ம். வே‌ர்‌க்கடலை சா‌ப்‌‌பி‌ட்டது‌ம், ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்காத கா‌பி அ‌ல்லது டீ அரு‌ந்தவு‌ம். ப‌சி‌த்த ‌பிறகு சா‌ப்‌பிட‌ச் செ‌ன்றா‌ல் குறைவான அளவே சா‌ப்‌பிட முடியு‌ம். இதனா‌ல் உட‌ல் எடை குறையு‌ம்.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இஞ்‌சியு‌ம் மரு‌த்துவ குண‌மு‌ம் ..
மணத்திற்காகவும், சுவைக்காகவும், மருத்துவக் குணங்களுக்காவும் நம்முடைய சமையல் பலவற்றில் இஞ்சியைப் பயன்படுத்துகிறோம். இஞ்சியின் மேல் உள்ள மணலை நீக்கி நன்றாகச் சுத்தம் செய்து வேக வைத்து வெயிலில் உலர்த்திய பின் கிடைப்பதுதான் சுக்கு!

100 கிராம் இஞ்சியில் தண்ணீர் 80.9 விழுக்காடும், புரோட்டீன் 2.3 விழுக்காடும்,கொழுப்பு 0.9 விழுக்காடும், தாதுக்கள் 1.2 விழுக்காடும், நார்ச்சத்து 2.4 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 12.3 விழுக்காடும் உள்ளன. மற்றும் கால்சியம் 20 மில்லிகிராமும் பாஸ்பரஸ் 60 மில்லி கிராமும் இரும்பு 2.6 மில்லிகிராமும் வைட்டமின் சி 6 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் `பி'யும் உள்ளன.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி முறைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இஞ்சி முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி. வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய நான்கினையும் ஒன்றாகக் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.

அடிக்கடி இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும். சளியினால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்துகளுடன் இஞ்சி டீ சாப்பிட மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும்.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது. சளியினால் தலைவலி ஏற்பட்டால் சுக்கை சிறிது நீர் விட்டு உறைத்து வலி இருக்கும் இடங்களில் லேசாகத் தடவவேண்டும்.

அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும். தற்பொழுது ஜிஞ்சர் பிரட், ஜிஞ்சர் கேக், இஞ்சி ஊறுகாய், ஜிஞ்சர் வைன், ஜிஞ்சர் பீர் போன்ற எண்ணற்ற பொருட்கள் இஞ்சியைத் துணைப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

ம‌ஞ்ச‌ள் காமாலை வராம‌ல் இரு‌க்க...
மஞ்சள் காமாலை, டைஃபாய்டு ஆகிய நோ‌ய்க‌ள் வராமல் இருக்க தினமும் 5 துளசி இலைகளை சாப்பிடவும்.

‌திடீரென ப‌ல் வ‌லி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல், வலிக்கும் இடத்தில் கிராம்பை வை‌‌த்தா‌ல் வ‌லி குறையு‌ம்.

புதரிலிருந்து விளையும் பழ‌ங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மாத விடாய் வலிகள் ஏற்படாது.

இஞ்சித் தூள் மற்றும் சீரகப் பொடியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

கடுகுப் பசையுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமலிலிருந்து விடுபடலாம்.

துளசி சாறுடன் சரியான அளவு தேன் கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.

சிறு நீரக நோய்க்கிருமியால் அவதிப்படுகிறீர்களா? சிறிது ஏலக்காய் போட்ட தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கவும்.

வயிறு வலி நீங்க, சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மெல்லவும்.

சளிப் பிடித்திருக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home