Wednesday 22 February 2012


அச்சிடுக
மின்-அஞ்சல்


15 பிப்ரவரி 2012 மாலை 09:10
hamdan
6வது வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு
எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து தென்காசியை சேர்ந்த 6வது வகுப்பு மாணவன் ஒருவன் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கி உள்ளான்.
எலுமிச்சம் மின்சாரம்
மின்சாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிந்து இருப்பார்கள்.
மின்சார தயாரிப்பின் புதுவழியாக தற்போது அமிலத் தன்மை வாய்ந்த எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து இருக்கிறான். தென்காசி மாணவர் முகம்மது ஹம்தான் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
செயல் விளக்கம்
ஜுஸ் தயாரிக்க உதவும் எலுமிச்சம்பழம், மின்சாரம் தயாரிக்க எவ்வாறு பயன்படுகிறது என்பதை சிறுவன் முகம்மது ஹம்தான், நிருபர்களிடம் அழகாக செய்து காண்பித்து விளக்கி கூறினான்.
எலுமிச்சம்பழத்தின் ஒருபுறம் இரும்பு ஆணியையும், மறுபுறம் செம்பு கம்பியையும் சொருகினான். இதே போல் 4 எலுமிச்சம்பழங்களில் கம்பிகளை சொருகினான். பின்னர் அந்த கம்பிகளுக்கு இடையே ஒயர் மூலம் இணைப்பு கொடுத்தான்.
முடிவில் சிறிய 2 வாட்ஸ் பல்பில் இணைத்தான். அப்போது அந்த பல்பு ஒளிர்ந்ததது. ஆச்சரியப்பட்டு போன நிருபர்கள் அனைவரும் கைதட்டி மாணவன் முகம்மது ஹம்தானை பாராட்டினர்.
பின்னர் அவன் நிருபர்களிடம் கூறியதாவது.
சிட்ரிக் அமிலம்
என்னுடைய தந்தை காதர் முகைதீன், மெக்கானிக்கல் என்ஜினீயராக உள்ளாh. தாயார் ஹமீமா கம்ப்யூட்டர் என்ஜீனியர். அரபு நாடான கத்தாரில் என் தந்தை பணியாற்றினார். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தேன். இந்த வருடம் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் குடும்பத்துடன் இங்கு வந்து விட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தற்போது படித்து வருகிறேன்.
அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும் என்று படித்தேன். எனக்கு புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதை அறிந்து, அதில் இரும்பு, செம்பு கம்பிகளை பயன்படுத்தி மின்சாரம் எடுக்க நினைத்தேன்.
காய்கறிகளில் மின்சாரம்
ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்து 0.5 வாட்ஸ் மின்சாம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2 வாட்ஸ் பல்பு எரிகிறது. இதனை மேலும் ஆராய்ச்சி செய்து அதிக பழங்களை வைத்து நவீன முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மின்சாரம் தேவைக்கேற்ப எடுக்க முடியும் என நம்புகிறேன்.
இதே போல் உருளைக் கிழங்கு, ஆரஞ்சு பழம், தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றில் இருந்தும் மின்சாரம் எடுக்க முடியும்.
இவ்வாறு மாணவன் முகம்மது ஹம்தான் கூறினான்.
செய்தி கலவை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home