Monday 23 April 2012


அச்சிடுக
மின்-அஞ்சல்


02 ஏப்ரல் 2012 மாலை 11:02
சூரியப் புயல் பூமியைத் தாக்குகின்றது, ஒசோன் படலத்தில் ஓட்டை விழுந்து உலகம் வெப்ப மயமாகி பனி மலைகள் உருகி, பூமியின் மேற்பரப்பு சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தினால் வாட்டப்பட்டு வரும் நிலையில் கோடையின் தாக்கத்திலிருந்து நாம் சற்றேனும் தப்பித்து தற்காத்துக் கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.
e54e326ef4ab26727efa30e0a875_grande
வருடா வருடம் வெப்பம் அதிகரித்து வருகின்றதே ஒழிய குறைந்த பாடில்லை. காலை பத்து மணி முதல் சூரியனின் கோரப்பிடி மாலை ஆறு மணியானாலும் குறையாமல் இறுகியே இருந்து வருகின்றது. இரவில் கூட புழுக்கத்தால் புரண்டு.புரண்டு படுத்தாலும் தூக்கமின்றி தவிக்கும் பரிதாப நிலைதான் நமக்கும். நகரில் மதிய வேளைகளில் ஆள் நடமாட்டம் குறந்து வெறிச்சோடிப் போன வீதிகள், கோடையிலிருந்து தப்பிக்க கூட்டுக்குள் தஞ்சம் அடையும் பறவைகள், தாகத்தால் தளர்ந்து போன கால்நடைகள், வேனல் கட்டிகள், கொப்பளங்கள், வியர்குருகள், என கோடைக்கால நோய்கள் மழலைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் ஒரு கை பார்த்து விட்டுச் செல்லும் பரிதாபம். இப்படி வெயில்காலத்தில் ஏற்படும் இன்னல்களுக்கு அளவேயில்லை.
02042012801
தட்ப வெப்ப நிலைகள் மாறும் போது நாமும் நம் வாழ்க்கையின் ரீதிகளை சற்று மாற்றியமைக்கத்தான் வேண்டும். உண்ணும் உணவு, உடுத்தும் உடைகள், அருந்தும் பாணங்கள், இருப்பிட வசதிகள் இப்படி ஏராளமான விஷயங்களில் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.
02042012799_copy
பருத்தி ஆடைகள் அணிவது, பழரசங்கள், இளநீர், மோர்,தயிர், காய் கனிகள் என கோடைக்கு ஏற்றவாறு நாம் நம்மைப் பேணிக் கொண்டால் வெப்பத்தை வெல்லலாம்.
fpnmix11_copy_copy
நுங்கு:-
வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீரை வேர்க்குருவின் மீது தடவினால் நல்ல குணம் கிடைக்கும். பனை நொங்கு அம்மை நோயின் வேகத்தையும் குறைக்கும்.
pic1_copy
தர்பூசணிப் பழம்:-
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
02042012796_copy
இளநீர்:
இளநீர், இயற்கை அளிக்கும் கோடைக்கான சத்துமிக்க 'மினரல் வாட்டர்'. சோடியம், மக்னீசியம், கால்ஷியம் சேர்ந்த பாக்டீரியா இல்லாத தொண்ணூற்று ஒன்பது சதவீத நீர்ச்சத்துள்ள பானம். இதிலுள்ள லாரிக் அமிலச் சத்து இளநீருக்கு அடுத்து தாய்ப்பாலில் மட்டும்தான் அதிகம் உண்டு. நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர் தான் சுத்தமானதும், சத்துக்கள் நிறைந்ததுமாகும். இளநீர் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீஷியம், கால்ஷியம், சல்பர் பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் 'சி'யும் 'பி' காம்ப்ளெக்ஸும் உள்ளன. கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும்.
02042012797
உஷ்ணக் கடுப்பு உடனடியாகத் தீரும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது இளநீர். உடலை எப்போதும் குளுமையாக வைத்திருக்கும்.முக அழகு பெற தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தைக் கழுவினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக பொலிவுடன் காணப்படும்.
02042012798_copy
தண்ணீரைக் குடியுங்கள்:-
கோடை காலத்தில் அடிக்கடி நீர்க்கடுப்பு வருவதுண்டு அதற்கு காரணம், மனித உடலுக்குத் தண்ணீ¬ரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது. தினசரி உபயோகத்துக்குத் தண்¬ணீர் உடலுக்குத் தேவை. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் நாற்பது மில்லி லிட்டர் தண்¬ணீர் தேவை. ஒருவரின் எடை அறுபது கிலோ என்றால் 2.4 லிட்டர் தண்ணீ¬ர் வேண்டும். கோடையில் இருபத்தைந்து சதவீதம் அதிகம் தேவை. அதனால் தண்ணீ¬ரைக் குடியுங்கள்.
சோற்றுக்கற்றாழை:
கோடையில் வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, முன் நெற்றித் தோல் கறுப்பாகிவிடும். சோற்றுக்கற்றாழை மடலினுள் (நொங்கு) போன்றிருக்கும் சதைப்பற்றால், பாதிப்புற்ற இடத்தைக் கழுவி வர கருமை நிறம் மறையும். வெயிலில் சென்று வந்தால் வரும் தலைவலி சிலருக்கு வாழ்நாள் பிரச்சினை. 'சுக்கு, மல்லி காபி' இத்தலைவலிக்கு உகந்த மருந்து.
நீர்ச்சத்து அதிகமுள்ள பழவகைகள்:
வெள்ளரி - 95% , தர்பூசணி - 98%, பால் - 90%, ஆப்பிள் - 85%,திராட்சை - 81%, ஆரஞ்சு - 87%, வாழைப்பழம் - 75%, அதனால் கோடைக் காலத்தில் இவைகளை நிறைய சாப்பிடுங்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு:-
கோடையுடன் வாந்தியினாலும் நீரிழப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. கருப்பை சிறுநீர் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வீர்கள். மாதுளை பழச்சாறில் சிறிது தேன் அல்லது பனைவெல்லம் கலந்து தினசரி சாப்பிடுங்கள். நீரிழப்பையும் தவிர்க்கலாம். வாந்தி உணர்வுக்கும் நல்ல மருந்து. மாதுளையின் இரும்புச்சத்து இன்னும் உதவிடும் உங்களுக்கு.
உடலில் நீர்ச்சத்து ஒரு சதவீதம் குறையும் போதே தாகம் தவிக்கத் தொடங்கி விடும். பத்து சதவீதம் குறைந்தால் தசை இறுக்கம், ஊரல், பலஹீனம் ஏற்படும். பதினோறு சதவீதத்துக்கு மேல் குறைந்தால் சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கும். நீர்ச்சத்து இருபது சதவீதம் குறைந்தால் மரணம் நிச்சயம். எனவே தாகம் எடுக்காமல் இருந்தால் கூட அவ்வப்போது தண்ணீ¬ர் குடிக்க மறக்காதீர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு 'நா வறட்சி' கோடையில் மேலும் அதிகமாகும். அதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொண்டு உமிழ்நீரைப்பருக 'நா வறட்சி' மறையும்.
இதர பாதிப்புகளைத் தவிர்க்க:
அதிக வேர்வையில் தோலின் வெளிப்புறம் பூஞ்சை பெருகும். அக்குள் பகுதியில் அரிப்பையும், தேமலையும் உருவாக்கிவிடும். இவற்றை ஒழிக்க சோப்புக்குப் பதிலாக நலுங்குமாவைத் தேய்த்துக் குளித்துவர பூஞ்சை மறையும்.
கோடையில் 'மெட்ராஸ் ஐ' பிரபல விருந்தாளி படுவேகமாகப் பரவும். இதிலிருந்து கண்ணைப் பாதுகாக்க நத்தியாவட்டை பூவை கண்ணில் வைத்து அழுத்துவதும், இளநீரில் கண்களைக் கழுவுவதும் நல்லது.
கோடையில் வரும் 'சன் ஸ்ட்ரோக்' மரணத்தைக் கூட நிகழ்த்திவிடும். தோல் வியர்க்காது இருத்தல், படபடப்பு, தலைவலி, தலை சுற்றல், குமட்டல், குழப்பமனம், மயக்கம் ஆகியவை சன் ஸ்ட்ரோக்கிற்கான அடையாளங்கள்.
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி தோலில் ஏற்படும் கோடைக் காயங்கள் (sun burns) முதுமையில் தோல் புற்று நோய்க்கு வழிவகுக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜாக்கிரதை.
வயிற்றுப் போக்கும், வாய்ப்புண்ணும் கோடையில் அதிகம் அவதியளிக்கும் விஷயங்கள். வயிற்றுக் குடலினுள் குடியிருக்கும் நன்மையளிக்கும் நுண்ணுயிரியான (லேக்டோபஸிலிஸ்) குறைவதே இதற்குக் காரணம். மோரில் இந்த நுண்ணுயிரி நிறைய இருக்கிறது. மோர் குடிக்க 'No More' வாய்ப்புண்.
காபி, மதுபானம் அதிக சர்க்கரை ஆகியவற்றை கோடையில் தவிர்ப்பது நல்லது. இவை உடலில் நீர்ச்சத்தை வேகமாக இழக்கச் செய்யும்.
கோடையில் கிடைக்கும் வடுமாங்காய் வாய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் நல்லது. அதிலிருக்கும் மெல்லிய துவர்ப்புத்தன்மை அனைவருக்கும் நல்லது. ஜீரணத்தைத் துரிதப்படுத்தி பசி உண்டாக்கும். வடுமாங்காய் கோடையில் உங்கள் 'மெனு'வில் தினசரி இருக்கட்டும்.வியர்க்குருவின் பிறப்பே பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான். சூரியக் கதிர்கள் தோலில் தொடர்ந்து தாக்குவதால் ஏற்படும் எழுச்சிகள் தான் இது. பன்னீர், சந்தனம், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால் வியர்க்குரு மறையும்.
வறுத்த, பொரித்த, கோழிக்கறி, போன்ற உணவு வகைகளை கோடையில் தவிர்த்துவிடுங்கள். மீன் உணவு நல்லது. வெயிலின் உக்கிரத்தில் 'அம்மை' நோய் அவதி அதிகம் வரும். அம்மை வராமல் தடுத்துக்கொள்ள வாரம் இருநாள் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்கள். மிகுந்த குளிர் பானங்களை கோடையில் தவிர்க்க வேண்டும். அதிக குளிர்தன்மை கொண்ட இவை வயிற்று வலியை உண்டாக்கும். ஒரு நாளைக்கு அறுநூறு கிலோ கலோரி உடல் செயல்திறனைப் பெற, ஒரு லிட்டர் வியர்வையை வெளியேற்றுகிறோம் என்பது தெரியுமா? உங்களுக்கு?
வியர்க்குருவின் தீவிர வளர்ச்சியே 'வேனல் கட்டிகள்' சீழ்க் கட்டிகளாக மாறிவிடும். கட்டி நன்கு பழுத்துவிட்டால் சுட்ட மஞ்சள் பொடி போட்டு விளக்கெண்ணெய் தடவி வெற்றிலையில் மேல் பூச்சாக ஒட்டிவிடலாம் கட்டி உடைந்து சீழ் வெளியேறி கட்டி ஆறிவிடும்.
கோடையில் சருமத்தை பாதுகாக்கும் இலை வைத்தியம்:-
கோடை‌க் கால‌த்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். தோலில் அரிப்பு, முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். இதற்கு பயந்துகொண்டே பாதிபேர் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடப்பார்கள். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை ‌த‌வி‌ர்‌க்க ந‌ம் ‌வீ‌ட்டிலேயே பல மரு‌ந்துக‌ள் உள்uளன. அவற்றை பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
images_3
வேப்பிலை மகத்துவம்:-
கோடையில் வேப்ப மரங்கள் பசுமையாக காட்சியளிக்கும். கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை போக்கவே இறைவன் நமக்கு அளித்த அருட்கொடை வேம்பு. எனவே வீட்டிற்கு முன்பு உள்ள வேப்ப மரத்தில் இருந்து இலைகளை பறித்து அவற்றை குளிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து குளிக்கலாம். இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
மாமர இலைகள்:
கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் மாமர ‌இலைகளை‌ப் போ‌ட்டு கொ‌தி‌க்க ‌விடவு‌ம். அந்‌த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கவு‌ம். இதுபோ‌ன்று மா இலைகளை‌ப் போ‌ட்டு‌க் கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் உட‌லி‌ல் ஏற்ரபடு‌ம் ப‌ல்வேறு சரும நோ‌ய்களை‌த் தடு‌க்கலா‌ம். கோடைகால சரும பா‌தி‌ப்பு இரு‌ந்தாலு‌ம் ‌விரை‌வி‌ல் மறை ‌ந்து‌விடு‌ம்.
ஆப்பிள், ஆரஞ்சு தோல்:
ஆ‌ப்‌பி‌ளி‌ன் தோலை ‌சில‌ர் ‌சீ‌வி‌த் தூ‌க்‌கி எறி்‌ந்து ‌விடுவா‌ர்க‌ள். அதையு‌ம் ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு அரை‌த்து முக‌த்‌தி‌ற்கு‌ப் போடலா‌ம். கோடை காலத்தில் டல்லான முகம் பளிச் என்று ஆகும். ஆரஞ்சு பழத் தோலினை காயவைத்து பொடி செய்து அதை முகத்திற்கு பேக் போடலாம் சருமம் அழகாகும்.
பூண்டு எண்ணெய்:-
சரும பா‌தி‌ப்புகளை‌ப் போ‌க்குவ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு அதி க மு‌க்‌கிய‌த்துவ‌ம் உண் டு. பரு‌க்களு‌க்கு‌ம் பூ‌ண்டு ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. கா‌தி‌ல் ‌ஏற்ுபடு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மி பா‌தி‌ப்புகளு‌‌க்கு பூ‌ண்டு எண்மணெ‌ய் ‌சிற‌ந்த மரு‌ந்தாக அமையு‌ம்.
தோல் அரிப்புகளை போக்க:
கோடை‌க் கால‌த்‌தி‌ல் ‌விய‌ர்வை‌யினா‌ல் உட‌லி‌ன் இடு‌க்கு‌ப் பகு‌திக‌ளி‌ல் அரி ‌ப்பு ஏற்டபடுவது இய‌ற்கை. கோடை காலத்தில் அதிக ரசாயன‌த் த‌ன்மை கொ‌ண்ட சோ‌ப்பு, ஷா‌ம்பு‌க்களை‌ப் ப‌ய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம். தோ‌ல் அரிப‌ப்பை‌த் தடு‌க்கு‌ம் சாதாரண மரு‌ந்துக‌ள் ‌வி‌‌ற்பனை‌யி‌ல் உள்னளன. அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். அவ்வ‌ப்போது உட‌லி‌ன் இடு‌க்கு‌ப் பகு‌திகளை த‌ண்‌ணீரா‌ல் சு‌த்த‌ம் செ‌ய்து துடை‌த்து ‌விடுவது‌ம் ந‌ல்லது. பொதுவாக அக்‌கு‌‌ள் போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ரோம‌ங்களை ‌நீ‌க்குவது ‌மிக மு‌க்‌கிய‌ம். அடு‌த்தபடியாக பரு‌த்‌தி‌யினா‌ல் ஆன உள்ளாடைகளை அ‌‌ணியு‌ங்க‌ள். அது வியர்வையை நன்றாக உரிஞ்சும் வேர்க்குரு ஏற்படாமல் தடுக்கும்.
மேற்கூறியவற்றை கடை பிடித்து வந்தால், நாம் இக் கோடையின் கோரப்பிடியிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அரோக்கியத்துடன் வாழலாம்.
பார்வையும்&கோர்வையும்
படங்கள் : ஹிஜாஸ் மைந்தன்.
குறிப்பில் உதவி : கூடல், போல்ட்ஸ்கை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home