Tuesday 17 November 2015

நரை முடி அகல முருங்கைக் கீரை

நரை முடி அகல முருங்கைக் கீரை


 சாதாரணமாக வீடுகளில்தென்படும் முருங்கை மரத்தை,மருத்துவ பொக்கிஷம் என்றேசொல்ல வேண்டும். ஏனெனில்இது எண்ணற்ற வியாதிகளுக்குபல வகைகளில் மருந்தாகிறது.முருங்கைக் கீரை வாரம்இருமுறை சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக முடிஉதிர்வது நிற்கும்.முடிநீண்டுவளரும். நரை முடிஅகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில்முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்துஅதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின்காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும்.

முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கவல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும்தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகுரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால்உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு,தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகைஉள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடிநீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும்.கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகியவியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார்சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண்,கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயைஉணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப்காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும்.பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும்பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைகீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைஅகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் (Iron)- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள்இருக்கின்றன.நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரைவகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம்பாட்டிமார்கள்.
இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலைவலியும் வந்து பாடா‌ய்படுத்தும். அதுக்கு ஈஸியான வைத்தியம் இருக்கு. சுக்கை தண்ணி விட்டு உரசி (இழைத்து)கொழகொழனு எடுத்துக்கோங்க. அதை நெத்தியில பத்து போட்டா அஞ்சு நிமிஷத்துல தலைவலி பறந்து போயிரும். சிலபேருக்கு தலை கனத்து ஏதோ பாரத்தை தலையில தூக்கி வச்ச மாதிரி இருக்கும். அப்பிடிப்பட்ட நேரங்க‌ள்ல தலையணையில நொச்சிஇலையை வச்சி தூங்கினா பாரம் இறங்கி நிம்மதியான தூக்கம் வரும். ஜலதோஷம் நீடிச்சிதுன்னா சளி பிடிச்சிக்கிட்டு மனுசனை உண்டு இல்லைனு ஆக்கிரும். இந்த மாதிரி நேரங்க‌ள்ல பூண்டுப்பால் ரொம்பநல்லா கைகுடுக்கும். பூண்டுப்பால்னா என்னன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியாம இல்லை. பசும்பால்ல ஒரு முழு பூண்டை உரிச்சுப்போட்டு நல்லா வேக வைக்கணும். அதை அடுப்புல இருந்து கீழ இறக்குறதுக்கு முன்னாடி மிளகுத்தூ‌ள், மஞ்ச‌ள்தூ‌ள் போடணும். முடிஞ்சா அதை ஒரு கடைசல் கடைஞ்சி பனங்கல்கண் டு போட்டு ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடணும்.

பூண்டுப்பால் ராத்திரி சாப்பிடலாம், அதேபோல பூண்டுக்குழம்பும் சளி பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்தை மதிய சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா சளி பிரச்சினைக்கு கைகொடுக்கும். மிளகுத்தூளை சுடுசோத்துல நெ‌ய் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்துல இஞ்சிச்சாறு, இஞ்சி ஜூஸ் குடிக்கலாம். இஞ்சிச்சாறு எடுத்ததும் அதை வடிகட்டி வச்சிரணும். அஞ்சு நிமிஷம் கழிச்சி பார்த்தா அடியில வெ‌ள்ளையா ஒண்ணு படியும். நச்சுப்பொரு‌ள். அது இல்லாம மேல தெளிஞ்ச நீரை மட்டும் குடிக்கணும். இஞ்சி ஜூஸ் எப்பிடி எடுக்கணுன்னா இதே இஞ்சி சாறோட எலுமிச்சை சாறு, சீனி (சர்க்கரை), தேன் சேர்த்து குடிக்கணும்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home