Wednesday 22 February 2012


ஒரு காரம் ஒரு இனிப்பு....ஒரே கிழங்கிலே ஒரே பதிவிலே லலாலா..லா!

ஒரே கிழங்கைக் கொண்டு இரு வேறு சுவைகளில் சமைக்க முடியுமா? முடியும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு.......நாங்க செல்லமாய் அழைக்கும் சீனிக்கிழங்கு. இதை வைத்துத்தான் ரெண்டு டிஷ் தரப் போகிறேன்.
ஒன்று இனிப்பு மற்றது காரம். சேரியா?

இனிப்புக்குத் தேவையானவை:
சீனிக்கிழங்கு...........கால் கிலோ
பனங்கருப்பட்டி.....ரெண்டு சிரட்டை
சுக்குப்பொடி............ரெண்டு தேக்கரண்டி
ஏலப்பொடி...............ரெண்டு தேக்கரண்டி

எப்படி செய்வோமடி:
முதலில் சீனிக்கிழங்கை அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அளவாக வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உறித்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் ஒரு கடாயில் வடிகட்டி அடுப்பில் கொதிக்கவிடவும். அதில் சுக்கு, ஏலப் பொடியை சேர்க்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை சேர்த்து
மெதுவாக கிளறவும். கருப்பட்டி பாகு இறுகி வரும் போது அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixs1C_0ynvkh8bcv2zVDDcI35JM-PnQzULYBFcRYcQv0b3n1HFh2usR-k4LUGrSpaLGKK4K21PrxMAygbzt5Bz2hg9jkxruZEAo-tzVcyFwgAw__lF2DC5_aOzBna324rqqFJ60zS6LYA/s320/DSC07513.JPG
சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும் இந்த பதார்த்தம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரிடமிருந்து அறிந்து கொண்டது. சுக்கு ஏலக்காய் மணமும் கருப்பட்டிப் பாகும் சேர்ந்து அருமையாயிருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR4tDMd0PhFgveA520ngzTkcsNzdf5B2-hxTBiNW6PaDdSy-tistNtZjRB4qDaUZoAEauiKxBEAzOsUgvAlaBtJcYCvRjVdC-KNkEcdpcg0odBchpO1f3Ll8r9lPo2FbuBTqdgXcpcqRI/s320/DSC07514.JPG
அடடா....! படத்தில் ஒரு கருப்பட்டிச் சிரட்டையையும் வைக்க மறந்தேனே!!!!


இனி காரம் பக்கம் போவோமா? போ...வோமே!!!
இது என்னோட டிஷ். உருளைக்கிழங்கிலேதானே காரக் கறி செய்திருப்பீர்கள்?
இங்கே நான் அதையே சீனிக்கிழங்கிலே செய்திருக்கிறேன்.
எப்படின்னு பாக்கலாமா? ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க. வெரி சிம்பிள்.
முதலில் சொன்னது போல் வேக வைத்து வட்டமாக நறுக்கிய சீனிக்கிழங்கு.
பின் ஒரு பௌலில்
மஞ்சள் பொடி..........................ரெண்டு தேக்கரண்டி
ஜிரகப்பொடி................................ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி..............................ரெண்டு தேக்கரண்டி
மிளகாய்பொடி.............................ரெண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி.......ரெண்டு தேக்கரண்டி
உப்பு....................................................தேவையான அளவு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoVjKvFwbRP8z8RmhDbg7QrZg9O74dSESEB7mFnlvK2FwcaR-aytmrccW8oBLKFAI9YcXOGBZ_j4yr3sc_qJEx5ICS2Dkggz4tMYZgW71bTKYUhSr4JmpTqQBiTh1o8l6QEfUjvlKm3vI/s320/DSC07515.JPG
மேற் சொன்ன பொடிகளை ஒரு பௌலில் போட்டு கலந்து அதோடு வேகவைத்து நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை கலந்து பொடிகள் ஒன்றுபோல் கிழங்கில் கோட்ஆகுமாறு நன்றாக குலுக்கி, https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhcZCXt9uxo7YYBp0AreqpqR5b7l7Tinv6LTsKJwVt9UyxK985dkpkJ32no0mLMLDQDLy4WjDq8r6BfNhYG3d_MorzOhe3AzyYQ5kRHCLvqLwertCQhRsQXLINDpMOk4-THQ_FVLh-Yr8/s320/DSC07516.JPG
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீனிக்கிழங்கை கடாயில் விட்டு கிளறவேண்டும். நல்ல முறுகலாக வரும் வரை பிரட்டி எடுத்து தட்டில் மாற்றிப் பரிமாறவும். இனிப்பும் காரமும் கலந்த ஒரு சுவையில் அபாரமாயிருக்கும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHiRmqLpdEFRqd0jENrEIMgfjTo-9Bdp_XzeSsdW1QPk6PzD9l8oNH8BZea35H1tQ4-DHYZRk4ZxigwS-JKTuZNJfYGSE9PIcl4fq8duq18n3vruMP6my1H1Cxw712OB23rpO3fJCE9mQ/s320/DSC07518.JPG
இம்மாம் பெரிய மிளகாயெல்லாம் போட்டால்....படுகாரமாயிருக்கும்!!!

இரண்டு சுவையுமே எனக்குப் பிடித்தவைதான். இதைப் படிச்சவங்களும் புடிச்சவங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்களேன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home