Wednesday 22 May 2013

துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்.‏


·         துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்.
·    
·    
·    
·    
·    
·    
·    
·    
·    
அதிரை ஃபாரூக் (adhiraifarook@gmail.com)
5/4/2013
Picture of அதிரை ஃபாரூக்
ஏக இறைவனின் திருப்பெயரால்....
إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا {31}

உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்பு மிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.4:31

துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரைகளில் பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போன்றபொய்யான செயல்கள் அனைத்தும் யூதர்களிடமிருந்தேப் பிறந்தது என்பதை விளக்கி இருந்தோம்.
பொய், யூதர்களின் கருவறையில் பிறந்து பல பிரிவுகளாக பிரிந்து சென்று பிற மதத்தவர்களின் மடியில்வளர்ந்தது என்றால் மறுக்க முடியாத உண்மை.
சீரிய இஸ்லாம் மார்க்கம் உலகுக்கு வருவதற்கு முன் மனித குலத்தில் மலிந்துக் கிடந்த மூடப் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் இஸ்லாமிய அறிவொலிக் கதிர்கள் உதயமாகி எரித்து சாம்பலாக்கியது. அவற்றில்பொய் பேசும் பழக்கமும் ஒன்று.
பொய்யை வேறோடும், வேறடி மண்ணோடும் இஸ்லாம் தான் ஒழித்துக் கட்டியது என்பதை கடந்தகட்டுரைகளிலும் பார்த்தோம், இனி வரும் கட்டுரைகளிலும் சில சம்பவங்களை காண்போம்.
23 வருட வாழ்க்கையில் தொடர் உபதேசங்கள்.
ஏகஇறைவனின் சத்தியத் தூதர்(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பொய்பேசுவதனால் ஏற்படும் உலக-மறுமை இழப்புகளைக் கூறி பொய் எந்த வழியிலும், வேறு எந்த பெயரிலும்முஸ்லீம் சமுதாயத்திற்குள் நுழைந்து விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து உபதேசங்களைசெய்து கொண்டே இருந்தார்கள்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்குநான் தெரிவிக்கட்டுமா ? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதர்அவர்களே என்று கூறினர். 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்என்றார்கள்.
பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து கொண்டு , 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும்(மிகப் பெரிம் பாவமே) என்றார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக்கண்ட) நாங்கள் அவர்கள் நிறுத்தமாட்டார்களா?' என்று நினைக்கும் அளவுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்கள்என்று அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 6274.
பெரும் பாவங்கள் அனைத்தும் நரகில் சேர்க்கக் கூடியவைகள் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
ஆனூலும் அதை நிருத்த மாட்டார்களா ? என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு தொடர்ந்து கூறிக்கொண்டேஇருந்தார்கள் என்றால் எந்தளவுக்கு பொய் பேசும் பழக்கமும், பொய்யான செயல்களும் சமுதயாத்தில் தீங்குவிளைவிக்கக் கூடியவைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அந்த ஒரு தடைவ மட்டும் தொடர்ந்துக் கூறி விட்டு, அதன் பிறகு  விட்டு விட்டார்களா என்றால் ? அது தான்இல்லை, அண்ணல் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் கூறிக் கொண்'டே இருந்தார்கள் பொய்யான செயல்கள் நடக்கக் கண்டால் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.   
அபிவிருத்தியை தடுக்கும் பொய்யின் அடிப்படையிலான வியாபாரம்.
சிலர் வியாபாரத்தில் கூடுதல் லாபம் வைத்து விற்பதற்காக அந்த பொருள் தயாரிக்கப்படும் நாட்டையே மாற்றிக் கூறி விற்று விடுவார்கள் வாங்குவோர் நம்புவதற்காக பொய் சத்தியத்தையும் சேர்த்து செய்வார்கள்.
சத்தியம் செய்து அழுத்தம் கொடுத்துக் கூறியக் காரணத்தால் வாங்குவோரும் அதை நம்பி கேட்ட விலையைக்கொடுத்து வாங்கி விடுவார்கள்.
 லாபமும் பல மடங்கு கிடைத்து விடும் அது அவருக்கு இரட்டை சந்தோஷத்தை அளிக்கும், ஆனால் பொய் பேசிஃப்ராடு செய்து அதன் மூலம் அடைந்த அந்த லாபமும், லாபத்தின் மூலம் அடைந்த அற்ப சந்தோஷமும்தற்காலிகமானது தான்.
ஏன் என்றால் ?
ஒவ்வொருவருடைய பொருளாதாரத்திலும் அவருக்கே அறியாமல் அளவற்ற அருலாளனும், நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான் அது பல மடங்காகபல்கிப் பெருகுகிறது. ஆனால் பொய் பேசி செய்த வியாபாரத்தின் லாபத்தில் அல்லாஹ் அபிவிருத்தியைஏற்படுத்துவதில்லை.
ஏன் என்றால் ?
ஒருவர் மற்றவருடைய பொருளாதாரத்தை பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலான தொகையையோஏமாற்றி எடுத்துக்கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை கடுமையாக கண்டிக்கிறாகன்.
4:29. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

ஹராமான வழியில் பொருளீட்டுவோரை, ஹராமான வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோரைஅல்லாஹ் நேசிப்பதில்லை அவருடைய கோரிக்கையை(துஆவை)யும் அங்கீகரிப்பதில்லை அதனால் பொய்பேசி செய்த வியாபாரத்தின் லாபத்தில் அபிவிருத்தி நிருத்தப்பட்டு விடுகிறது.
உண்மை பேசி வியாபாரம் செய்து அதன் மூலம் அடையும் 30 ரூபாய் லாபத்தை அல்லாஹ் நாடினால் அதில் 300ரூபாய் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்தி விடுவான்.
ஆனால் 30 ரூபாய் கிடைக்க வேண்டிய லாபத்தை பொய் பேசி 90 ரூபாயாக (மும்மடங்காக) ஆக்கினால்அல்லாஹ்வின் அபிவிருத்தியும், அருளும் அகற்றப்பட்ட அந்த 90 ரூபாய் சாதாரண 10 ரூபாய்க்கானதேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மேலும் 900 ரூபாயை எதாவது ஒரு வழியில் இழக்கும் நிலைஉருவாகலாம்.
விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமைஇருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவு படுத்தியிருந்தால் அவர்களின்வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின்வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 2082.
இத்தனை உபதேசங்களையும் மீறி வியாபாரி ஒருவர் பொய் சத்தியம் செய்து தனது பொருளை அதிகலாபத்திற்கு விற்க முயன்றால் அவருக்கு மன்னிப்பே கிடையாது நரகம் தான் தண்டனை என்று அல்லாஹ்எச்சரிக்கின்றான்.
வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.4:30  

எந்தளவுக்கு இஸ்லாம் பொய் பேசுவதையும், பொய்யான செயல்கள் புரிவதையும் தடுத்திருக்கிறது என்பதைஇதன் மூலம் அறியலாம்.
துரோகத்திற்கு கருவியாக பயன்படுத்தும் பொய் சத்தியம்.
சிலர் எதிராளியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது பிடிக்காத மனைவியை ரத்து செய்ய வேண்டும்என்பதற்காக அல்லது இன்னும் பிற சுயநல காரியங்களை அடைந்து கொள்வதற்காக பொய் சத்தியம்செய்வார்கள்.
இதனால் எதிராளி கவிழ்ந்து விடலாம், பிடிக்காத மனைவி ரத்து செய்யப்பட்டு விடலாம் துரோகத்திற்கும்,சுயநலத்திற்கும் சத்தியத்தை கருவியாக பயன்படுத்தியக் காரணத்தால் அவர் வெற்றிப் பெற்று விடலாம்.
ஆனால் எந்த காரியத்துக்காக அவர் பொய் சத்தியம் செய்து வென்றாரோ அதில் அவரால் நிலைத்து நிற்கமுடியாது என்பதுடன் அதுவே அவரை கவிழ்க்கும் கருவியாக மாறி விடும்.
நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கி விடாதீர்கள். (அவ்வாறுசெய்தால்) நிலை பெற்ற பின் (உங்களின்) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின்பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தைத் அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 16:94), (இவ்வசனத்தின்மூலத்திலுள்ள) 'தகல்' (துரோகம்) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள். என்றுஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம்செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 6675.
சில குற்றங்களுக்கு உலகில் தண்டனை கிடைத்து விடும், சில குற்றங்களுக்கு மறுமையில் தண்டனைகிடைக்கும் எந்த குற்றத்திற்கு எங்கே தண்டனை கொடுப்பது சிறந்தது என்பதை எல்லாம் அறிந்த அல்லாஹ்ரப்புல் ஆலமீன் தெளிவாக  அறிந்து வைத்திருப்பதால் அதனடிப்படையில் கொடுத்து வரம்பு மீறுவோருக்குப்பாடம் புகட்டுவான்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நிலை பெற்றப் பின் பாதங்கள் சரிந்து விடும் என்றுக்கூறியதுடன் இதை பெரும் பாவத்தின் பட்டியலிலும் சேர்த்தார்கள்.
பெரும் பாவங்களின் பட்டியலில் பொய் சத்தியமும் இருப்பதால் அற்ப ஆயுளில் வாழும் மனிதன் அற்பசந்தோஷத்திற்காக சத்தியத்தை கருவியாக்கினால் ஒன்று உலகில் பாதங்கள் சறியலாம் அல்லது மறுமையில்மொத்த உடலும் நரகில் சறியலாம்.
ஆகவே பொய்சத்தியம் செய்து வியாபாரம் செய்வோரோ, பொய் சத்தியம் செய்து துரோகம் செய்வோரேஅல்லாஹ்வின் தூதருடைய அழகிய உபதேசங்களையும், அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் ஏற்றுக்கொண்டு பெரும் பாவங்களிலிருந்து விலகிக் கொண்டு நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்பு மிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.4:31
அழிவில் விளிம்பில் சென்றுக் கொண்டிருந்த மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட மனித குலமாணிக்கம் மாநபி (ஸல்) அவர்கள் வழி கேட்டில் தெளிவானதாக உள்ள பொய்யை இனம் கண்டு களைஎடுத்தார்கள்.
அவர்களால் களை எடுக்கப்பட்ட பொய்யை அவர்களுடைய சமுதாயமே விதைத்து அறுவடை செய்யநினைப்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதருடைய கட்டளையை காற்றில் பறக்க விடுவதற்குசமமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த ஒரு விஷயத்தில் கூறியதையே திரும்ப திரும்பக் கூறினார்களோஅது கடுமையான விஷயம் என்பதை அன்றைய சமுதாய மக்கள் விளங்கி இருந்தார்கள்.
அதனடிப்படையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழுத்தம் கொடுத்துக் கூறும்  விஷயங்களில் ஏவிக்கொள்ள வேண்டியவற்றை ஏவிக் கொள்வார்கள், விலக்கிக் கொள்ள வேண்டியவற்றை விலக்கிக்கொள்வார்கள்.
இன்னும் தொடருவதற்கு தேவையான தகவல்கள் நிறைந்து இருப்பதால் இன்ஷா அல்லாஹ் தொடரும்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home