Friday 12 April 2013

அதிக நன்மையுள்ள தர்மம் எது?


அதிக நன்மையுள்ள தர்மம் எது?
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். நீர்,ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு;இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புகாரி)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home