Monday 23 April 2012


மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்
11TH APRIL, 2012
digg
மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் ஆய்வில் தகவல்
மீ ன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை 6 மாதங்களாக கொடுத்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களுக்கு ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அறிவுக் கூர்மையும் ஏற்பட்டிருந்தது.மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தி அதிகரிப்புக்கு காரணம் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 மூளை சுறு சுறுப்பு
ஒமேகா 3 அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்கள் அதிகம் சாப்பிட்டால் அறிவுக்கூர்மை ஏற்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.
 மீன்களின் சிறப்பு
மேகா-3 அமிலம் மனிதனின் உடலில் இயற்கையாகவே சுரப்பது இல்லை. மற்ற உணவுப் பொருட்களிலும் இவை இருப்பதில்லை. மீன்களில் மட்டுமே ஒமேகா-3 இருக்கிறது. எனவே மீன் சாப்பிட்டால் மட்டுமே ஒமேகா-3 கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 பக்கவாதம் வராது
மேலும் மீன் உணவானது பக்கவாதம் வரும் வாய்ப்பையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 3600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாரம் மூன்று முறை மீன் உணவுகளை உண்ணக்கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் மூளையில் பக்கவாதம் ஏற்படுத்தும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் படிப்படியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீன் உணவுகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்..
நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர் ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர் இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உட்பட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்த போது ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர் ஸ்டோன்ஹவுஸ் தெரிவிக்கையில், இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
நன்றி: தினசரி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home