Posted: 07 Apr 2013 10:35 AM PDT
இமாம் இப்னு
தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இயக்கம்
இமாம் இப்னு தைமிய்யா
(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய
பேராற்றலும் செயற்திறனும் (னுலயெஅiஉ) பின் விளைவுச் செறிவும் (ளுநஅiயெட) பெற்ற
மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.
இவர் பிறந்த காலம்
இஸ்லாமிய உலகைப் பொறுத்த வரை தொயின்பியின் வார்த்தையில் குறிப்பிடுவதாயின்
(ளுஉhளைஅ ழுக வுhந டீழனல Pழடவைiஉ) அரசுச் சமுதாயம் சின்னாபின்னப்பட்டிருந்த ஒரு
காலமாகும்.
இமாம் இப்னு
தைமிய்யாவின் காலம் சில விடயங்களில் இமாம் அஹ்மதின் காலத்தை ஒத்திருந்தது.
ஆயினும், இமாம் அஹ்மதின் காலத்தைப் போலன்றி இவர் காலத்தில் அறிவியல் இயக்கம் தேக்க
நிலையை அடைந்திருந்தது.
பிக்ஹுத் துறையானது
மாசடைந்து அதன் தூய்மையை இழந்திருந்தது. முன்னைய இமாம்களதும் அவர்களின்
மாணவர்களினதும் ஆக்கங்களை மனனமிட்டுப் பதிய வைத்துக் கொள்வதே சமூக முதன்மையைப்
பெறுவதற்குரிய ஒரு தகைமையாகக் கருதப்பட்டது. அத்துடன் புதிய பிரச்சினைகளின்
தீர்வுக்கு சட்ட மூலாதாரங்களை ஆதாரங்களாகக் குறித்துக் காட்டும் மரபு நீங்கி
இமாம்களின் நூல்களையும் பத்வாக்களையும் ஆதாரமாகக் காட்டும் புதிய மரபு ஒன்றும்
உருவாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து
குறித்த ஓர் இமாமை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கும் வளர்ந்தது.
இதன்வழி, குறித்த நான்கு இமாம்களுக்குப் பின் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு
விட்டது என்ற கருத்தோட்டமும் வலுப் பெற்றது. சுய சிந்தனாவழி, இஜ்திஹாத் என்பன
புறக்கணிக்கப்பட்டு, மத்ஹபுகளை, அதன் இமாம்களை ஆராய்வின்றிப் பின்பற்றும் பண்பு
வளர்ச்சி கண்டது. இப்பண்பே தக்லீத் எனப்படுகின்றது.
அறிவியல் ரீதியாகவும்
இருவரது காலமும் வேறுபட்டு அமைந்தன. இமாம் அஹ்மதின் காலத்திலோ அப்பாஸிய கிலாபத்
சில கலீபாக்கள் முஃதஸிலாக் கொள்கைச் சார்புடையோராக இருந்தபோதிலும் பலமிக்கதாகக்
காணப்பட்டது. ஆனால், இப்னு தைமிய்யாவின் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. அப்பாஸிய
கிலாபத்தின் ஸ்திரநிலை குன்றியிருந்தது. அவர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம்,
பொருளாதார வளம் என்பவற்றை முஸ்லிம் சிற்றரசுகள் அபகரித்திருந்தன.
ஆன்மிகத் தலைவர் என்ற
நிலையில் மட்டுமே கலீபாவை சிற்றரசர்கள் அங்கீகரித்திருந்தனர். முஸ்லிம் ஸ்பெய்ன்
அமீர்கள் அப்பாஸிய கலீபாவை ஆன்மிகத் தலைவராகவும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை.
அவர்கள் தம் சுயமான ஆட்சியைக் கொண்டு நடத்தினர். இவ்வாறு அப்பாஸிய கிலாபத்
ஐக்கியம் குறைந்து பலமிழந்து இருந்தபோது மேற்கேயிருந்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்
படையெடுப்பினாலும் கிழக்கேயிருந்து வந்த மங்கோலியப் படையெடுப்பினாலும் இஸ்லாமிய
அரசு மேலும் பலவீனமுற்றது.
இமாம் அஹ்மதின் காலம்
முதல் முஸ்லிம் சமூகத்தினுள் செல்வாக்குச் செலுத்திய கிரேக்க, பாரசீக சிந்தனைகள்
இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் மேலும் வலுவடைந்தன. அவற்றினால் தோன்றிய
சிந்தனா ரீதியிலான முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. அரசியல் ரிதியாகத்
தோன்றிய ஷீஆக்கள் இக்காலத்தில் சிந்தனா ரீதியான இயக்கமாக வளர்ச்சி கண்டனர்.
சுருக்கமாகச்
சொல்வதாயின், இப்னு தைமிய்யாவின் காலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் அகீதா
உயிரோட்டம் இழந்தும் நடத்தைகளில் ஊழல் மலிந்தும் தீமைகள் பரவியும் சிந்தனை
தேக்கமடைந்தும் இஜ்திஹாத் செயல் இழந்தும் மக்கள் கருத்து முரண்பட்டு பல
குழுக்களாகப் பிளவுபட்டும் இருந்த ஒரு காலமாகும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home