இன்று டிவியில் ஒரு சமையல்
நிகழ்ச்சி பாத்தேன். பாஸ்தாவை வைத்து புளீயோதரை மாதிரி செய்து காட்டினார்கள்.
நல்லாருந்துது.” இது நம்ம ரங்ஸ்.
இன்றைய மெனு இதுதான் என்றும் சொன்னார்.
எனக்கும் இது நல்லாருக்கே...நல்லாவும் வரும் போலிருக்கே என்று நான் ரெடி பண்ணி வைத்திருந்த காய்கறிகளை கவரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு அடுப்பில் புளிக்காய்ச்சல் தயார் செய்ய ஆரம்பித்தேன்.அப்படியே மற்றொரு அடுப்பில் பாஸ்தாவை வேக வைத்தேன்.
ஏது பாஸ்தா திடீரென்று? அதான் உடனே கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாரே!!!!!

தயிர் பாஸ்தா!!! மொத்த பாஸ்தாவில் மூன்றில் ரெண்டு பங்கு புளி
பாஸ்தாவுக்கும் மீதி ஒரு பங்கு தயிர் பாஸ்தாவுக்குமாக தனித்தனியே பிரித்து
வைத்திருந்தேன்.
தயிர் பாஸ்தாவுக்கான தாளிதம்....கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மாங்காயிஞ்சி, கலர் கொடமொழகாக்கள், பச்சை தராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
தயிர் பாஸ்தாவுக்கான தாளிதம்....கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மாங்காயிஞ்சி, கலர் கொடமொழகாக்கள், பச்சை தராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!!!

அருமையாக, மேற் சொன்னவற்றையெல்லாம் தாளித்து பாஸ்தா மேல் கொட்டியாச்சு!

தயிரும் ஊத்தியாச்சு!!

குழைய கிளறிய தயிர் பாஸ்தாவும் கார சாரமாக கிளறிய புளி பாஸ்தாவும்.
எல்லோரும் கிண்ணமும் ஸ்பூனுமாக ஓடியாங்கள்......வேண்டியதை அள்ளிக்கொள்ளுங்கள். வேண்டியது என்ன வேண்டியது...? ரெண்டுமே நல்லாத்தானிருந்தது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home